2025 ஆகஸ்ட் 05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் கண்டி மாவட்ட ஜம்இய்யா, கண்டி பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் கண்டி நகர் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இதில், பள்ளிவாயல்களை பராமரித்தல் மற்றும் அவற்றின் கண்ணியத்தை பேணுதல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் தலைமையகம் சார்பில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், உப செயலாளர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜம்இய்யாவில் பணியாற்றும் ஆளணியினரும் கலந்து கொண்டிருந்தனர்.


– ACJU Media –



