2025 ஜூலை 26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில், குருந்துகொட்டுவ ஜும்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில், குருந்துகொட்டுவ முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்ச்சிகள் வெவ்வேறு கட்டங்களாக நடைபெற்றன.
குறித்த நிகழ்வுகளில் கல்வியின் முக்கியத்துவம், வாழ்வியல் திறன்கள், குழந்தை வளர்ப்பு, பெற்றோர்-பிள்ளைகளிடையேயான புரிந்துணர்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில் சகோதரர் ரம்ஸி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –




