கொழும்பு மாளிகாவத்தை, இஸ்லாமிய மத்திய நிலைய மஸ்ஜிதில் ஜுமுஆ உரை நிகழ்த்தும் கதீப்மார்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு

2025.06.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு மாளிகாவத்தை, இஸ்லாமிய மத்திய நிலைய மஸ்ஜிதில் ஜுமுஆ உரை நிகழ்த்தும் கதீப்மார்களுக்கான விசேட வலுவூட்டல் நிகழ்வொன்று இஸ்லாமிய மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கதீப்மார்களின் குணநலன்கள், ஜுமுஆ உரைகளை தயாரிக்கும் படிமுறை, உரைகள் அமைய வேண்டிய விதம், ஜுமுஆ உரைகளினால் எதிர்பார்க்கப்படும் பலன்கள் போன்ற தலைப்புகளை முன்வைத்து விளக்கக் காட்சிகளுடனான தெளிவுகள் வழங்கப்பட்டன.

இதில், வளவாளர்களாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஆலிம்கள் விவகாரக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், ஃபத்வாக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் யஹ்யா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் இஸ்லாமிய மத்திய நிலைய மஸ்ஜிதில் ஜுமுஆ உரை நிகழ்த்தும் 22க்கும் மேற்பட்ட கதீப்மார்கள் கலந்து பயன்பெற்றனர்.

ஆலிம்கள் விவகாரக்குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ், அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.ஆர்.எம். ஹலீமுல்லாஹ், சமூக சேவைக் குழுவின் இணைப்பாளர் சகோதர் எம்.என். நுபைல் ஆகியோர் இந்நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

– ACJU Media –

Related Posts

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன