தெல்கஹகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு

2026 பெப்ரவரி 14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவாகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் கேகாலை, தெல்கஹகொட பிரதேச இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வொன்று தெல்கஹகொட ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில், இளைஞர்கள் சமூகத்தில் சிறந்த முன்மாதிரி மிக்கவர்களாக திகழ்வதற்கான பல்வேறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

குறித்த செயலமர்வில், தெல்கஹகொட ஜுமுஆ மஸ்ஜித் மஹல்லாவிற்குட்பட்ட 65க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன