2025 ஜூலை 20ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் காத்தான்குடி கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் பாலமுனை பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வொன்று நடுவோடை மீரா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் சுமார் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் ஆளணியினரான சகோதரர் ரம்ஸி, அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –





