2025 செப்டம்பர் 19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் கம்பளை கிளையின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அந்தவகையில், கம்பளை அல்-ஹிக்மா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வழிகாட்டல் நிகழ்வில் 122 பேரும் பென்ஹில் சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற வழிகாட்டல் நிகழ்வில் 259 பேரும் ஆன்டியாகடவத்த ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்ற வழிகாட்டல் நிகழ்வில் 146 பேரும் கலந்து பயன்பெற்றனர்.
இந்நிகழ்வுகளில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி மற்றும் அஷ்-ஷைக் மபாஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
– ACJU Media –




