முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

2026 ஜனவரி 05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக வெளிவிவகார அமைச்சில் நடைபெறும் கூட்டத்திற்கான திட்டமிடுதல் மற்றும் ஒவ்வொரு சிவில் சமூக அமைப்புக்கும் பொறுப்புகளை ஒதுக்குதல் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இதில், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜம்இய்யா சார்பில் உப தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொது முகாமையாளர் சகோதரர் எஸ். ஜவாஹிர் ஸாலிஹ், சமூக சேவைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் நுபைல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன