பொலன்னறுவை – கதுருவெல மாநகரில் அமைந்துள்ள அல் மஜீதிய்யா அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழாவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ் ஷைக் முஃப்தி எம். ஐ. எம். ரிஸ்வி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் சிறப்புரையும் ஆற்றினார்கள்.
2025.08.10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் பி.ப 02:00 மணி வரையில் கதுருவெல பெரிய ஜுமுஆப் பள்ளிவாசலில் வெகு விமர்சையாக நடைபெற்ற மேற்படி விழாவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவித் தலைவர்களுள் ஒருவரான அஷ் ஷைக் எச். உமர்தீன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ் ஷைக் நாகூர் ளரீஃப், அஷ் ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான், அஷ்ஷைக் எம்.என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டதுடன், அஷ் ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் அவர்கள் விஷேட உரையாற்றியமை குறிப்பிடக்தக்கது.
– ACJU Media –





