மொனராகல மாவட்டக் கிளை மற்றும் அதன் கீழ் இயங்கும் 03 பிரதேசக் கிளைகளுக்கான நிர்வாகத் தெரிவுகள்

2026 பெப்ரவரி 07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால் மொனராகல மாவட்டக் கிளை மற்றும் அதன் கீழ் இயங்கும் 03 பிரதேசக் கிளைகளுக்கான நிர்வாகத் தெரிவுகள் பக்னிகஹவெல பள்ளிவாயலில் நடாத்தப்பட்டன.

இதில், மொனராகல மாவட்டக் கிளை மற்றும் அலுபொத்த, பக்னிகஹவெல, கொடிகமுவ பிரதேசக் கிளைகள் சார்பில் சுமார் 50 ஆலிம்கள் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்களிடையே ஜம்இய்யாவின் யாப்பினடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பு முறையில் மிக நேர்த்தியான முறையில் தெரிவுகள் நடத்தப்பட்டன.

குறித்த தெரிவுகள், ஜம்இய்யாவின் உப பொதுச் செயலாளரும் கிளைகள் விவகாரப் பிரிவின் செயலாளருமான அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் மற்றும் பொது முகாமையாளர் எஸ். ஜவாஹிர் சாலி ஆகியோரது மேற்பார்வையிலும், ஜம்இய்யாவின் உத்தியோகத்தர்களது பங்களிப்புடனும் சிறப்பாக நடைபெற்றன.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன