முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு பணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட கௌரவ இப்ராஹீம் அன்ஸார் அவர்களுடனான சந்திப்பு

2021.11.17 (1443.04.11)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அழைப்பின் பேரில் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நேற்று 2021.11.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு சிநேகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்கள்.

இச்சந்திப்பின் போது முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகால சவால்கள் தொடர்பாகவும் இந்நாட்டில் சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் இப்ராஹீம் அன்ஸார், உதவிப் பணிப்பாளர்களான அஷ்ஷைக் அன்வர் அலி, அஷ்ஷைக் அலா அஹ்மத் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், உப தலைவர் அஷ்ஷைக் எஸ்.எச். ஆதம்பாவா, உதவிப் பொதுச் செயலாளர்களான அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் மற்றும் அஷ்ஷைக் எம்.எம்.எம். முர்ஷித், ஜம்இய்யாவின் சமூக சேவைப் பிரிவு செயலாளர் அஷ்ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷைக் ஏ.ஸி.எம். பாழில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊடகப் பிரிவு

 

 

 

 

 

 

 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன