டிட்வா அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக வெள்ளவத்தை ஜுமுஆ மஸ்ஜிதினால் சேகரிக்கப்பட்ட நிதிக்கான காசோலை மூதூர் மற்றும் தோப்பூர் மஸ்ஜித் நிர்வாகிகளிடம் கையளிப்பு

2026 ஜனவரி 22ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையம், வெள்ளவத்தை ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகம், மூதூர்-தோப்பூர் பகுதி ஜம்இய்யா கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் ஆகியவையிடையிலான சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் டிட்வா அனர்த்த நிலைமைகளினால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்களை இனங்கண்டு உரிய நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, டிட்வா அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக வெள்ளவத்தை ஜுமுஆ மஸ்ஜிதினால் சேகரிக்கப்பட்ட சுமார் 7.5 மில்லியன் ரூபா காசோலை மூதூர் மற்றும் தோப்பூர் மஸ்ஜித் நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதில், ஜம்இய்யாவின் தலைவர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஜம்இய்யாவின் அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தின் பிரமுகர்கள், வெள்ளவத்தை ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகிகள், மூதூர்-தோப்பூர் பகுதி ஜம்இய்யா உறுப்பினர்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன