2025.02.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடகக் குழுக்கூட்டம் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் அவர்களின் நெறிப்படுத்தலில் குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் ஜம்இய்யா தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், குழு தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் ரமழானில் விஷேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை முன்னெடுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் ஊடகக்குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –



