ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவினால் நடாத்தப்படவுள்ள கதீப்மார்களுக்கான செயலமர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஒன்றுகூடல்

2024.08.01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் விஷேட ஒன்றுகூடலொன்று குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வத்தளை இப்னு மஸ்ஊத் அரபிக் கல்லூரியில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் சகல கதீப்மார்களுக்குமான, பிரதான மூன்று விடயங்கள் உள்ளடங்கிய ஒருநாள் கருத்தரங்கு ஒன்றினை நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு சில முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன.

இதில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் என்.டி.எம். ளரீஃப், ஆலிம்கள் விவகாரக் குழுவின் உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா, அஷ்-ஷைக் இஸட்.எம். நுஹுமான், அஷ்-ஷைக் ஹுஸ்னி, அஷ்-ஷைக் கே.ஆர்.ஐ. ஸஅத், அஷ்-ஷைக் எம்.எஸ். ரியாஸ், அஷ்-ஷைக் எம்.எம்.எம். ரிழா, ஆலிம்கள் விவகாரக்குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன