2025.05.15ஆம் திகதி, பலஸ்தீன 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வு கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இலங்கையில் உள்ள பலஸ்தீன தூதரகம் மற்றும் பலஸ்தீன பேரழிவை நினைவுகூரும் இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு ஆகியன இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
இதில் அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
– ACJU Media –