2026 ஜனவரி 27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் தேசிய வலையமைப்பு செயற்றிட்டத்திற்கமைய சமூகத்தில் சகவாழ்வை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் பாணந்துறை அல்-பனாத் மகளிர் அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், களுத்துறை மாவட்டத்திலுள்ள ஜம்இய்யா கிளைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் சமூகத்திலுள்ள துறை சார்ந்தவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, சமூக மட்டத்தில் சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வினை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அதில் காணப்படும் சவால்கள் மற்றும் அவற்றை வெற்றி கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஜம்இய்யா சார்பில் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், தஃவா பிரிவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எச். அக்ரம், பொது முகாமையாளர் எஸ். ஜவாஹிர் ஸாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.



– ACJU Media –




