இறக்வானை ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்ற ஜம்இய்யாவின் 8ஆவது இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடி விநியோகம்

2024.02.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் 8ஆவது இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல் நிகழ்வு இறக்வானை ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

இன மத பேதமின்றி பல்லின மக்களையும் ஒன்றிணைத்து நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளர்கள் கலந்து கொண்டு இலவச சேவையினை பெற்று கொண்டதோடு இதுபோன்ற நிகழ்வுகளினூடாக 4,500 க்கும் மேற்பட்ட பல்லின மக்களும் சேவைகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ். எம் தாஸிம், நிறைவேற்றுக் குழு உறுப்பினரான அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், ஜம்இய்யாவின் சமூக சேவை பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம்.பவாஸ் மற்றும் சகோதரர் எம்.என்.எம்.நுபைல், அஷ்-ஷைக் டி. ஹைதர் அலி, ஜம்இய்யாவின் இறக்குவானை கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம். பாரிஸ், இறக்குவானை உதய திலகாராமய விஹாராதிபதி புஸ்செல்லே பஞ்சாதிலக தேரர், வெரலுகஹமுல்ல விஹாரையின் விஹாராதிபதி அம்புலுவ தேரர், இறக்வானை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் சுவாமி யோகஸ்வர சர்மா, அருட்தந்தை திருவாளன் டீ.ஆர். செல்வன் மற்றும் இறக்குவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுர சோமசிறி ஆகியோர்கள் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன