உலகத்தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு விஜயம்

2023.12.10 ஆம் திகதி உலகத்தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்து ஜம்இய்யாவின் பிரதிநிதிகளுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான ஆறு கொள்கை திட்டங்கள் அடங்கிய ஹிமாலயா பிரகடனமும் ஜம்இய்யாவின் பிரதிநிதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் சமூகம் சார் அமைப்புக்கள் இதற்காக ஒன்றித்து செயற்படவேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் ஜம்இய்யா சார்பில் உபதலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல், உபசெயலாளர்களான அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி மற்றும் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் எம்.எப்.எம். ஃபரூத், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் ஆகியோருடன் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன