2026 ஏப்ரல் 27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவினருக்கும் YMMA ராகம கிளையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
ராகம பிரதேசத்தில் ஜம்இய்யாவின் பாடத்திட்டத்திற்கமைய புதிதாக அல்-குர்ஆன் மத்ரஸா ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் இதில் காணப்படும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் அலசப்பட்டது.
மேலும், முஅல்லிம்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறிகளை நடத்துவது தொடர்பிலும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
இதில், ஜம்இய்யா சார்பில் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில், அஷ்-ஷைக் நுஃமான், அஷ்-ஷைக் அஃலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –


