சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றில் மரணமடைந்த முஸ்அப் எனும் மாணவனின் குடும்பத்தினரை ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்து கவலை தெரிவித்தனர்

2023.12.08 ஆம் திகதி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மத்ரஸா ஒன்றில் மரணமடைந்த காத்தான்குடி, மெத்தை பெரிய பள்ளிவாயல் பகுதியினை சேர்ந்த எஸ்.எம். முஸ்அப் எனும் மாணவனின் மரணத்தையிட்டு அனுதாபம் தெரிவிப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒரு குழு குறித்த மாணவனின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து கவலை தெரிவித்ததுடன் பெற்றோருக்கு ஆறுதலும் கூறினர்.

இந்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யாவின் உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, மௌலானா கலாநிதி கலீல் அஹ்மது (முனீரி), அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக்கல்லூரிகள் விவகாரப் பிரிவின் உறுப்பினர்களான அஷ்-ஷைக் ஸஃத், அஷ்-ஷைக் எம்.எச். எம். பவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன