க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்

ACJU/NGS/2022/146
2022.06.02 (1443.11.01)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இளைஞர்கள் விடயத்தில் கவனம் செலுத்தி அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை காலத்துக்குக் காலம் வழங்க வேண்டியது பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், உலமாக்கள் ஆகிய நம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

அந்த வகையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (புஊநு ழுஃடு) நிறைவு பெறுகின்ற இவ்வேளையில் இவ்வருடம் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவ, மாணவிகளுக்கு தகுதியான மற்றும் தேர்ச்சி பெற்ற உலமாக்கள் மற்றும் துறைசார்ந்தவர்கள் ஊடாக கல்வி மற்றும் ஆன்மீக ரீதியான வழிகாட்டல்களை வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறு ஊர் தலைமைகளையும் மஸ்ஜித் நிர்வாகிகளையும் ஜம்இய்யாவின் கிளைகளையும் துறைசார்ந்தவர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்விடயத்தில் தங்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவு தயாராக உள்ளது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

தொடர்புகளுக்கு : இளைஞர் விவகாரப் பிரிவு இணைப்பாளர் – 077-3918074

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன