பலஸ்தீனின் காஸா பகுதியில் இடம்பெறும் படுகொலைகளுக்கான ஜம்இய்யாவின் உத்தியோகபூர்வ அனுதாபச் செய்தி பலஸ்தீன தூதுவரிடம் கையளிப்பு

கடந்த சில நாட்களாக பலஸ்தீன் மற்றும் காஸா பகுதிகளில் நிகழ்த்தப்பட்டுவருகின்ற தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை கண்டித்து; அங்கு நிற்கதிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கான அனுதாபச் செய்தியினை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள் குழு இலங்கையில் உள்ள பலஸ்தீனிய தூதரகத்திற்கு 2023.10.19 அன்று விஜயமொன்றை மேற்கொண்டனர்.

குறித்த தாக்குதல் நடவடிக்கைகள், படுகொலைகளையிட்டு ஜம்இய்யா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகள், அனுதாபச்செய்தி மற்றும் பொதுமக்களுக்கான வழிகாட்டல்கள் ஆகியன இச்சந்திப்பின் போது இலங்கைக்கான பலஸ்தீனிய தூதுவர் ஸுஹைர் ஸைத் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த சந்திப்பில் ஜம்இய்யா சார்பாக பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக், பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உபதலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி, நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் மற்றும் சமூக சேவைப்பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன