அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கொழும்பிலுள்ள அச்சக உரிமையாளர்கள் ஆகியோரிடையே இடம்பெற்ற சந்திப்பு

21 ஜூலை 2025ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கொழும்பிலுள்ள அச்சக உரிமையாளர்கள் ஆகியோரிடையிலான ஒன்றுகூடலொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 13 பிராந்தியங்களுக்குமான தொழுகை நேரங்களை புதிதாக அச்சிடப்படவுள்ள நாட்காட்டிகளில் இணைத்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில், கொழும்பிலுள்ள அச்சகங்களின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன