‘விடுமுறை தினங்களில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்தான ஒழுங்குகள்’ எனும் தலைப்பில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை வானொலியில் இடம்பெற்ற வழிகாட்டல் நிகழ்ச்சி

2026 ஏப்ரல் 09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரப் பிரிவின் ஆலிம்கள், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘விடுமுறை தினங்களில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்தான ஒழுங்குகள்’ எனும் தலைப்பில் வழிகாட்டல்களை வழங்கினர்.

விடுமுறை தினங்களில் பொழுதை கழிக்க மேற்கொள்ளும் பிரயாணங்களின் போது முஸ்லிம்கள் கடைப்பிடித்து நடக்க வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் குறித்து இதன் போது தெளிவுபடுத்தப்பட்டதுடன் இஸ்லாமிய விதிமுறைகளுக்குப்பட்டு எவ்வாறு பயணங்களை பயனுள்ள முறையில் அமைத்துக்கொள்வது என்பது குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இதில், ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், ஊடகப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன