2025.07.02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழு மற்றும் ஃபத்வாக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் கல்-எலிய மஸ்ஜிதுல் ஸுப்ஹானி பெரிய பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை உறுதிப்படுத்தப்பட்டது.
இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்களுடன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிறைக் குழு மற்றும் ஃபத்வாக் குழு உறுப்பினர்கள், இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

– ACJU Media –






