2026 ஜனவரி 02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் குளியாபிட்டிய, யாயவத்தை – ஹைராத் ஜுமுஆ பள்ளிவாயலில் கிப்லா திசை உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த பள்ளிவாயல் வளாகத்தில் கட்டட விஸ்தரிப்பு மற்றும் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் தொழுகைக்கான கிப்லா சரிபார்க்கப்பட்டு மீளுறுதி செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ் மற்றும் ஹைராத் ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –


