2026 பெப்ரவரி 12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் அவிசாவளை, தல்துவ ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்க்கப்பட்டு மீளுறுதி செய்யப்பட்டது.
குறித்த பள்ளிவாயல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ், ஆலிம்கள் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் பவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –



