அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், பலாங்கொட கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்ட அறிமுகம் மற்றும் பிரதேசத்தில் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை மீள கட்டியெழுப்புவது குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட ஒன்றுகூடலொன்று 2026 ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்றது.
இதன்போது, அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் முக்கியத்துவம் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன் ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பாடத் திட்டத்திற்கமைய பிரதேசத்திலுள்ள 17 மஸ்ஜிதுகளில் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டம் குறித்தும் விரிவான அறிமுகம் வழங்கப்பட்டது.
இதில், பலாங்கொட பிரதேசத்திலுள்ள ஆலிம்கள், முஅல்லிம்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள் என பலரும் கலந்து பயன்பெற்றதுடன் இது தொடர்பான தமது சந்தேகங்களையும் கேட்டறிந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் ஆகியோருடன் அஷ்-ஷைக் அஃலம், அஷ்-ஷைக் நுஸ்ரத், அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் அஸ்வர் அலி ஆகியோரும் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.



– ACJU Media –


