அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவினர் மற்றும் கம்பளை மக்தப் நிலைய நிர்வாகிகளிடையே நடைபெற்ற முக்கிய சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவினருக்கும் கம்பளை மக்தப் நிலைய முஅல்லிம்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று 2026 ஜூன் 07அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது ‘தஜ்தீத்’ எனப்படும் ஜம்இய்யாவின் புதிய பயணத்திற்கமைய அல்-குர்ஆன் மத்ரஸா முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் மற்றும் மேம்படுத்தல்கள் குறித்து இதன்போது தெளிவுகள் வழங்கப்பட்டதுடன் அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் எதிர்கால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இதில், கம்பளை மக்தப் நிலையம் சார்பில், அஷ்-ஷைக் ராபித், அஷ்-ஷைக் ஹாதி, அல்-ஹாஜ் அலீ மற்றும் அல்-ஹாஜ் நளீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜம்இய்யா சார்பில், அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் பாஸில் ஹுமைதி, அஷ்-ஷைக் அஃலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன