2026 ஜனவரி 29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் தலைமை முஆவின்கள் மற்றும் முஆவின்களுடனான முக்கிய சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயற்பாடுகளை மேலும் வீரியப்படுத்தல், மத்ரஸாக்களில் கற்பிக்கும் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களை வலுவூட்டுதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இதில், ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவரும் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் தவிசாளருமான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா ஆகியோருடன் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் ஆளணியினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


– ACJU Media –




