2026 ஏப்ரல் 08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவினர் புதுக்கடை, மீரானிய்யா ஜுமுஆ பள்ளிவாயலுக்கு விஜயம் செய்து அங்கு நடைபெற்றுவரும் அல்-குர்ஆன் மத்ரஸாவின் நிலைமைகளை பார்வையிட்டனர்.
இதன்போது, குறித்த மத்ரஸாவில் கடமை புரியும் முஅல்லிம்களை சந்தித்து அது குறித்த தகவல்களை கேட்டறிந்து கொண்டதுடன் மத்ரஸாவின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடினர்.
இதில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் அஃலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


– ACJU Media –



