திஹாரிய, அல்-இக்ரா அகாடமியில் நடைபெற்ற ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்ட அறிமுக நிகழ்வு மற்றும் முஅல்லிமாக்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி

2026 ஏப்ரல் 29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்ட அறிமுக நிகழ்வு மற்றும் முஅல்லிமாக்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி திஹாரிய அல்-இக்ரா அகாடமியில் நடைபெற்றது.

இதன்போது ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா முறைமை குறித்து அறிமுகம் வழங்கப்பட்டதுடன் ஜம்இய்யாவினால் தயாரிக்கப்பட்ட அல்-குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டம் குறித்தும் தெளிவான முறையில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனையடுத்து, அல்-இக்ரா அகாடமியில் நடைபெற்றுவந்த அல்-குர்ஆன் மத்ரஸாவானது மே 02ஆம் திகதியிலிருந்து ஜம்இய்யாவின் பாடத்திட்டத்திற்கமைய நடைபெறும் என அதன் பணிப்பாளர் அஷ்-ஷைக் ஸப்ரான் அவர்களால் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில், குறித்த அகாடமியில் கற்பிக்கும் 12 முஅல்லிமாக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் அஃலம், அஷ்-ஷைக் ரிழ்வான் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

‘மஹல்லாவாசிகளை வலுவூட்டுவதில் மஸ்ஜித் இமாம்களின் முக்கிய பங்கு’ எனும் தலைப்பில் நடைபெற்ற கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவிற்குட்பட்ட மஸ்ஜித் இமாம்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன