அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கட்டாரின் முன்னாள் ஆட்சியாளர் ஷெய்க் ஹமத் பின் கலீஃபா ஆல்-தானி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, 2026 ஜூலை 14 அன்று கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது, தூதரகத்தின் பொறுப்பதிகாரியான அலீ பின் சாலிம் அல்-நுஐமி அவர்களைச் சந்தித்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரங்கல் செய்தியை கையளித்தனர்.
இவ்விஜயத்தில், ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டதுடன், தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் தமது இரங்கல் செய்தியை பதிவு செய்தனர்.




– ACJU Media –


