குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

2024.01.16ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் என். நிலோபர் அவர்கள் கலந்துகொண்டதோடு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் ஜம்இய்யா சார்பில் உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன், அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி, உப செயலாளர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ், அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் கே.ஆர்.எம். இன்ஸாப், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் ஜம்இய்யாவின் உத்தியோகத்தர்களான அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன