2026 பெப்ரவரி 04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் ‘புனித ரமழான் மாதத்தின் பயனை அடைவதற்கான வழிகாட்டல்கள்’ எனும் தலைப்பில் ஜம்இய்யா கிளைகளின் உறுப்பினர்களுக்கான விசேட வழிகாட்டல் செயலமர்வு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
ரமழானை பயனுள்ள முறையில் கழிப்பதற்கான வழிகாட்டல்களை தத்தமது பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிப்பதற்கான முன்னாயத்தம் மற்றும் திட்டமிடலை ஆலிம்களுக்கு வழங்கும் நோக்கில் இச்செயலமர்வு நடைபெற்றது.
நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலின் பிரதான இமாம் அல்-ஹாபிழ் அல்-காரி ஷஈத் ஜம்ஸித் அவர்களினால் அல்-குர்ஆன் பாராயணம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நிகழ்விற்காக வருகை தந்தவர்களை வரவேற்கும் முகமாக ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் தனது உரையில் தஃவா பிரிவின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக் காட்டினார்.
வரவேற்புரையினை அடுத்து ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் தஃவா பணியின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் குறித்து விளக்கியதுடன் அப்பணியில் ஜம்இய்யாவின் கடந்தகால மற்றும் தற்கால செயற்பாடுகள் குறித்தும் அது மேலும் வீரியப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக் காட்டினார்.
அதனை தொடர்ந்து, ஜம்இய்யாவின் தஃவா பிரிவு குறித்த அறிமுகத்தினை பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் அவர்கள் வழங்கியதுடன் தற்காலத்தில் அதற்கான அவசியம் மற்றும் இருக்கக் கூடிய சவால்கள் குறித்தும் விளக்கக் காட்சிகளுடன் தெளிவுபடுத்தினார்.
அதனையடுத்து ‘ரமழானை உயிர்ப்பித்தல்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்திய தஃவா பிரிவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம் அவர்கள், மஸ்ஜிதுகள் ஊடாகவும் அல்-குர்ஆன் ஊடாகவும் சமூக சேவைகள் ஊடாகவும் எவ்வாறு ரமழானை உயிரோட்டமுள்ளதாக மாற்றலாம் என்பதனை விளக்கக் காட்சிகளுடன் தெளிவுபடுத்தினார்.
இதனை தொடர்ந்து, ஜம்இய்யாவின் தஃவா பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் அவர்கள் ‘ரமழானின் உச்ச பயனை அடைதல்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை புரிதல், ஸதகா செய்தல், இப்தார் ஏற்பாடு, இஃதிகாஃப் போன்ற வணக்கங்கள் ஊடாக ரமழானை எவ்வாறு பயனுள்ளதாக கழிக்கலாம் என்பது குறித்து விளக்கினார்.
அவரது உரையினை அடுத்து, நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஆலிம்களுடன் குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் தத்தமது பகுதிகளில் ரமழானை முன்னிட்டு எவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர் என்பது குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது. அவர் தனது உரையில் ஜம்இய்யாவின் அழைப்பினையேற்று நிகழ்விற்கு வருகை தந்தவர்களுக்கும், நிகழ்விற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கிய கொள்ளுப்பிட்டி ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகத்தினருக்கும் ஜம்இய்யா சார்பில் நன்றிகளை தெரிவித்தார்.
ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஃபத்வாக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் அவர்கள் இந்நிகழ்வினை சிறப்பாக தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.








– ACJU Media –






1 thought on “அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘புனித ரமழான் மாதத்தின் பயனை அடைவதற்கான வழிகாட்டல்’ செயலமர்வு”
A humble request to ACJU and our respected Ulama
With sincere respect and goodwill, I would like to make a humble request to the All Ceylon Jamiyyathul Ulama (ACJU) and our respected Ulama.
As the blessed month of Ramadan approaches, our Muslim community in Sri Lanka is in great need of your guidance, presence, and leadership. This sacred period is a time when the Ummah looks towards its scholars for spiritual direction, unity, and motivation.
Therefore, with due respect, I kindly request that during Ramadan, our esteemed Ulama give priority to serving within Sri Lanka, dedicating their valuable time and knowledge to the mosques and communities here, rather than travelling overseas.
Your presence among the people during this blessed month would be a great mercy for the entire Muslim community. May Allah accept your sacrifices, strengthen the unity of the Ulama, and grant immense reward for every effort made in His path.
This is my humble request, made with love, respect, and concern for the Ummah.