REF.NO:ACJU/PRO/2026/27s
12.02.2026 23.08.1447
பிரச்சாரக் குழு
கௌரவ தலைவர், செயலாளர்,
மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ
ரமழான் மாத வழிகாட்டல் நினைவூட்டி,
எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா எம்மனைவரதும் மார்க்க, சமூகப் பணிகளை ஏற்றுக்கொள்வானாக!
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரச்சாரக் குழு மாவட்ட மட்டத்தில் எப்படியான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவிருக்கின்றது, நவீன சவால்களின் போது எப்படி உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் இணைந்து சமூகத்தை வழிநடாத்துவது அத்துடன் வருகிற புனித ரமழானை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வது போன்ற வழிகாட்டல்களை கடந்த 04.02.2026 ஆம் திகதி கொள்ளுபிட்டி ஜும்ஆ பள்ளிவாயலில் மக்கள்மயப்படுத்தியமை தாங்கள் அறிவீர்கள்.
அதன் அடிப்படையில் பிரச்சாரக் குழு வெளியிட்ட கையேட்டை அடிப்படையாக வைத்து குறிப்பாக ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவையும் பகலையும் பயனுள்ளதாகக் கழிக்க வழிகாட்டும் வண்ணம் ஒவ்வொரு பிரதேசங்களிலும் நாளைய குத்பா பிரசங்கத்தை அமைத்துக் கொள்ளுமாறும், குறிப்பிட்ட வழிகாட்டலை மஸ்ஜிதினூடாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றடைவதற்கான வழிகளை மேற்கொண்டு மேலும் மஸ்ஜித்களில் புனித அல் குர்ஆன் தப்ஸீர், குர்ஆன் ஹல்காக்களை ஏற்படுத்தி கடைசி பத்து நாட்களை மஸ்ஜிதில் தரிக்க ஆர்வம் காட்டுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
குறிப்பு: மக்கள்மயப்படுத்தப்பட்ட ரமழான் வழிகாட்டல் கையேடு (Link) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
◼️ புனித ரமழான் மாதத்தின் உச்ச பயனை அடைவதற்கான தனி நபர்களுக்கான ACJU பிரசாரக் குழுவின் வழிகாட்டல்
https://www.acju.lk/ta/rmdn-gdnc-pub-26/
◼️ புனித ரமழான் மாதத்தின் உச்ச பயனை அடைவதற்கான மஸ்ஜித் நிர்வாகங்கள் மற்றும் கதீப்மார்களுக்கான ACJU பிரசாரக் குழுவின் வழிகாட்டல்
https://www.acju.lk/ta/rmdn-gdnc-msj-26/
நமது தூய எண்ணங்களுடனான எமது அடுத்த கட்ட நகர்வுக்கான அமர்வு சிறப்பாக இடம்பெற வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
வஸ்ஸலாம்!
அஷ் – ஷைக் எச் உமர்தீன்
தவிசாளர், பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
அஷ் – ஷைக் ஏ.ஆர் அப்துர் ரஹ்மான்
செயலாளர், பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா




