ஜம்இய்யாவின் சமூக சேவைப் பிரிவின் புதிய உறுப்பினர் குழுக் கூட்டம்

2026 ஜனவரி 28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் புதிய உறுப்பினர் குழுவின் முதலாவது கூட்டம் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

2025 புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவின் பின்னர் சமூக சேவைப் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தல், உறுப்பினர்களின் பொறுப்புகளை வரையறுத்தல், பிரிவின் எதிர்கால வேலைத்திட்டங்களை திட்டமிடுதல்  நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில், பிரிவின் தவிசாளர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன