ஷமாஇலுத் திர்மிதியினை மக்கள் மயப்படுத்துவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழு – ஜம்இய்யாவின் மொனராகல, இரத்தினபுரி, கேகாலை, பொலன்னறுவை, பதுளை மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளிடையேயான ZOOM கலந்துரையாடல்

2024.08.19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழு மற்றும் ஜம்இய்யாவின் மொனராகல, இரத்தினபுரி, கேகாலை, பொலன்னறுவை, பதுளை மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்கள் ஆகியோரிடையில், ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகளை நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விஷேட ஒன்றுகூடலொன்று ZOOM தொழில்நுட்பம் வாயிலாக நடைபெற்றது.

குறித்த ஒன்றுகூடலில், மொனராகல, இரத்தினபுரி, கேகாலை, பொலன்னறுவை, பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஜம்இய்யாவின் கிளைகளுக்குட்பட்ட மஸ்ஜித்களில் ‘ஷமாஇலுத் திர்மிதியினை’ மக்கள் மயப்படுத்தும் முகமாக விஷேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு அதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

இதில், ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன