2025 ஜூலை 30ஆம் திகதி, இலங்கை விமானப்படையின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் கௌரவ அதிதியாகவும், பிரதம பேச்சாளராகவும் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கொள்ளுபிட்டிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல். வாசு பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகள், கொள்ளுப்பிட்டிய ஜுமுஆ பள்ளிவாயல் இமாம்கள், நிர்வாகிகள், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த விமானப்படை வீரர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


– ACJU Media –




