ACJU கிளைகள் விவகாரக்குழு & ‘பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழு’ ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தளம் மாவட்ட மற்றும் பிராந்தியக்கிளை ஜம்இய்யாக்களின் புதிய நிர்வாகிகளுக்கான விஷேட செயலமர்வு

2024.10.12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் கிளைகள் விவகாரக்குழு மற்றும் ‘பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழு’ ஆகியவற்றின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளை ஜம்இய்யாக்களின் புதிய நிர்வாகிகளுக்கான பயிற்சி மற்றும் பதவி நியமனங்கள் வழங்கும் விஷேட செயலமர்வு வெள்ளவத்தை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் ‘ஜம்இய்யா கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான பொறுப்புக்கள், கடமைகள் தொடர்பில் தெளிவுகளை வழங்கியதோடு பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கான சில ஆலோசனைகளையும் முன்வைத்தார்கள்.

இதில், அஷ்-ஷைக் இர்பான் முபீன், சகோதரர் இர்பஃத் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு நிர்வாக முகாமைத்துவம், நிதி மேலாண்மை போன்ற தலைப்புக்களில் விளக்கக் காட்சிகளுடனான தெளிவுகளை வழங்கினார்கள்.

குறித்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டிருந்த 20 புதிய நிர்வாகிகள், ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் எம். அர்கம் நூராமித் அவர்களது முன்னிலையில் உறுதிமொழியளித்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டதோடு தமது பொறுப்புக்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதில், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக்குழுவின் பிரதம இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத், கிளைகள் விவகாரக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் அப்துல் காதர், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான், இளைஞர் விவகாரக்குழுவின் துணை இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி, அல்-ஹாபிழ் கஸ்ஸாலி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன