2025 ஜூலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலின் கீழ், காத்தான்குடி கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், கிளையின் இளைஞர் விவகாரப் பிரிவைச் சேர்ந்த ஆலிம்களுக்கான இருநாள் பயிற்சி செயலமர்வு, கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த பயிற்சி செயலமர்வில் 16 ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், ஜம்இய்யாவின் ஆளணியினரான சகோதரர் ரம்ஸி, அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –



