அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவுக்கான புதிய உறுப்பினர் குழு நியமனத்தின் பின்னரான முதலாவது கூட்டம்

2026 ஜனவரி 21ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவுக்கான புதிய உறுப்பினர் குழு நியமனத்தின் பின்னரான முதலாவது கூட்டம் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

ஆலிம்கள் விவகாரக் குழுவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான செயற்றிட்டத்தினை தயாரிப்பது குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன் ஆலிம்களை வலுவூட்டல் மற்றும் மேம்படுத்தல் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் அஷ்-ஷெய்க் முனீர் முளஃப்பர் அவர்கள் கலந்துகொண்துடன் ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரப் பிரிவின் தவிசாளர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன