வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயம் தொடர்பாக

2021.11.17 (1443.04.11)

கடந்த 2021.11.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் எச். உமர்தீன் அவர்களின் தலைமையில் கண்டி மற்றும் குருணாகல மாவட்ட ஜம்இய்யாக் கிளைகளின் உலமாக்களைக் கொண்ட ஒரு குழு புத்தளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டது.

இதன்போது இக்குழு ஜம்இய்யாக் கிளைகளின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களைச் சந்தித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டது.

குறித்த வெள்ள அனர்த்தத்தினால் நூற்றுக் கணக்கான வீடுகளும், பல வியாபார ஸ்தலங்களும் பாரியளவில் சேதமடைந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமான உதவிகளை வழங்கி அவர்களின் துயர் துடைக்க முன்வருமாறு அனைத்து மக்களிடமும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இச்சோதனைகளிலிருந்து அனைவரையும் பாதுகாத்து, ஆரோக்கியமான மற்றும் சுபீட்சமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவானாக.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன