அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகப் பிரிவினர் வீரகேசரி பத்திரிகை பிரதான அலுவலகத்திற்கு சிநேகபூர்வ விஜயம்

2026 ஜனவரி 21ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகப் பிரிவினர் வீரகேசரி பத்திரிகை பிரதான அலுவலகத்திற்கு விஜயம் செய்து அங்கு பணியாற்றும் உயரதிகாரிகள் மற்றும் செய்தி ஆசிரியர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

குறித்த சந்திப்பில், நூற்றாண்டை கடந்து பயணிக்கும் ஜம்இய்யா பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதுடன் ஜம்இய்யாவின் பணிகள் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், ஜம்இய்யாவுடன் நல்லுறவுகளைப் பேணுவதுடன் ஊடக ரீதியிலான தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம். செந்தில்நாதன், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன், தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.பீ. ஹரன், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் மற்றும் ஏனைய செய்தி ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடியதுடன் ஜம்இய்யாவின் 2022 – 2025 காலப் பகுதிக்கான செயற்பாட்டறிக்கையின் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் ஜம்இய்யாவின் பதில் பொதுச் செயலாளரும் ஊடகப் பிரிவின் செயலாளருமான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பஸால்,  ஆர்.எம். அஸீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன