பலஸ்தீன் மக்கள் மீது நிகழ்த்தப்படும் மனிதப் படுகொலைகளை கண்டித்து ‘We are one’ அமைப்பினரால் நடாத்தப்படவுள்ள மாநாடு – ஜம்இய்யாவுக்கும் அழைப்பு

பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்படும் மனிதப் படுகொலைகளை கண்டித்து ‘We are one’ அமைப்பினரால் நடாத்தப்படவுள்ள மாநாட்டிற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதற்காக அவ்வமைப்பின் பிரமுகர்கள் 2023.11.04 ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

நவம்பர் 07ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த மாநாட்டிற்கு ஜம்இய்யாவின் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கோரி ‘We are one’ அமைப்பின் தலைவர் சுரேன் சந்திர மற்றும் அதன் பிரமுகர்கள் ஜம்இய்யாவின் பிரதிநிதிகளுக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பிதழ்களை கையளித்தனர்.

ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜம்இய்யா சார்பாக பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே அப்துல் ஹாலிக், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

 
 
 
 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன