ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா குழுவினரால் நடத்தப்பட்ட வெலிமடை பிரதேச குர்ஆன் மத்ரஸாக்களின் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு

2024.03.02, 03 ஆகிய திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவினரால் வெலிமடை பிரதேசத்தில் குர்ஆன் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கும் மஸ்ஜித் நிர்வாகிகளுடான கலந்துரையாடலும் வெலிமடை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றன.

இதில் கற்பித்தல் உத்திகள், சிறுவர்களுக்கு கற்பிக்கும் முறைகள் மற்றும் வகுப்பறை முகாமைத்துவம் போன்ற விடயங்களில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இக்கருத்தரங்கில் ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத், அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் அஸ்வர் அலி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன