மகளிர் விவகாரப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜம்இய்யாவின் சேவைகள், பணிகள் மற்றும் வெளியீடுகள் குறித்து ஆலிமாக்களுக்கு தெளிவூட்டும் செயற்றிட்டம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மகளிர் விவகாரப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஜம்இய்யாவின் சேவைகள், பணிகள் மற்றும் வெளியீடுகள் குறித்து ஆலிமாக்களுக்கு தெளிவூட்டல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்திலுள்ள சில மகளிர் அரபுக் கல்லூரிகளில் ஜம்இய்யா பற்றிய அறிமுக நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

நூற்றாண்டினை கடந்து பயணிக்கும் ஜம்இய்யாவின் வரலாறு மற்றும் அதனால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள், வேலைத் திட்டங்கள் குறித்தும், காலத்தின் அவசியம் கருதி ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட நூல்கள் குறித்தும் ஆலிமாக்களுக்கு தெளிவூட்டி அவர்களையும் எமது பயணத்தில் உள்வாங்கி செயற்படும் நன்னோக்கில் இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்,

▪️ 2026 ஜனவரி 15ஆம் திகதி, ஜம்இய்யாவின் மகளிர் விவகாரப் பிரிவினால் புதுக்கடை, அல்-புஷ்ரா மகளிர் அரபுக் கல்லூரியில் ஜம்இய்யா பற்றிய அறிமுக நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் குறித்த கல்லூரியில் கற்கும் 30 மாணவிகள் மற்றும் கற்பிக்கும் 06 முஅல்லிமாக்கள் கலந்து பயன்பெற்றனர்.

▪️ 2026 ஜனவரி 19ஆம் திகதி, கொலன்னாவ, தாருல் ஜன்னாஹ் மகளிர் அரபுக் கல்லூரியில் ஜம்இய்யா பற்றிய அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் 23 மாணவிகள் மற்றும் 06 முஅல்லிமாக்கள் கலந்து பயன்பெற்றனர்.

▪️ 2026 ஜனவரி 20ஆம் திகதி, மாளிகாவத்தை, தாருல் ஹஸன் மகளிர் அரபுக் கல்லூரியில் ஜம்இய்யா பற்றிய அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இதில் அக்கல்லூரியில் கற்கும் சுமார் 80 மாணவிகள் மற்றும் கற்பிக்கும் 06 முஅல்லிமாக்கள் கலந்து பயன்பெற்றனர்.

▪️  2026 ஜனவரி 22ஆம் திகதி, வெள்ளவத்தை தர்பிய்யத்துல் பனாத் மகளிர் அரபுக் கல்லூரியில் ஜம்இய்யா பற்றிய அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இதில், அக்கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் லியாகத் அலி, கற்பிக்கும் உஸ்தாத்மார்கள், முஅல்லிமாக்கள் மற்றும் 18 இறுதிவருட மாணவிகள் ஆகியோருடன் கொழும்பு தெற்கு கிளை ஜம்இய்யாவின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வுகளில், ஜம்இய்யாவின் மகளிர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் சிராஜ் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன