கிருலப்பனை, அல்-ஐன் மகளிர் அரபுக் கல்லூரியில் நடைபெற்ற ஜம்இய்யா பற்றிய அறிமுக நிகழ்வு

2026 பெப்ரவரி 16ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மகளிர் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் சேவைகள், பணிகள் மற்றும் வெளியீடுகள் குறித்த அறிமுகத்தினை வழங்கும் நிகழ்வு கிருலப்பனை, அல்-ஐன் மகளிர் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.

ஜம்இய்யாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அரபுக் கல்லூரிகளில் கற்கும் இறுதிவருட மாணவிகள் மற்றும் அங்கு கற்பிக்கும் முஅல்லிமாக்களுக்கு ஜம்இய்யா பற்றிய அறிமுகத்தினை வழங்குதல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், குறித்த கல்லூரியில் கற்கும் 56 மாணவிகள் மற்றும் பட்டம் பெற்று வெளியான 09 பழைய மாணவிகள் ஆகியோருடன் அங்கு கற்பிக்கும் 03 முஅல்லிமாக்களும் கலந்து பயன் பெற்றனர்.

இதில், மகளிர் விவகாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் சிராஜ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டதுடன் ‘மன்ஹஜ்’ உள்ளிட்ட ஜம்இய்யாவின் வெளியீடுகளையும் கையளித்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன