2025 டிசம்பர் 31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவினருக்கும் வத்தளை கிளை ஜம்இய்யாவின் பதவிதாங்குநர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன், சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்படுவதற்கான முயற்சிகளை ஜம்இய்யாவின் கிளைகள் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதில், கம்பஹா மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர், செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் வத்தளை கிளை ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் நுஃமான் மற்றும் கிளையின் ஏனைய பதவிதாங்குநர்களும் கலந்து கொண்டனர்.
ஜம்இய்யா சார்பில் தலைவர், உப தலைவர்கள், உதவிப் பொதுச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலருடன் ஜம்இய்யாவின் ஆளணியினரும் பங்கேற்றிருந்தனர்.



– ACJU Media –


