2024.07.12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக்குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஹெம்மாதகம கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ‘சிறந்த பிரஜையை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளிலான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வுகள் ஹெம்மாதகம பிரதேசத்தின் மஸ்ஜிதுகள், பாடசாலைகள், அரபிக் கல்லூரிகளில் மிக சிறப்பாக நடைபெற்றன.
மேற்படி, ஹெம்மாதகம பிரதேசத்தில் மொத்தமாக 26 செயலமர்வுகள் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டதோடு குறித்த செயலமர்வுகளில் சுமார் 4,500 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
மாவனல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் வித்தியாலயம், மடுல்போவ பாதிபிய்யாஹ் முஸ்லிம் மகா வித்தியாலயம், கொட்டேகொட முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் மடுல்போவ ஜாமிஉல் ஹஸனாத் ஜுமுஆ மஸ்ஜித், அமுருப்ப மஸ்ஜிதுன் நூர் ஜுமுஆ மஸ்ஜித், கொட்டேகொட அல்-ஹுதா ஜுமுஆ மஸ்ஜித், பள்ளிபோர்வ ஹெம்மாதகம பெரிய பள்ளிவாயல், தும்பலுவாவ நூர் ஜுமுஆ மஸ்ஜித், ஹிஜ்ராகம ஜாமிஉல் ஹைராத் ஜுமுஆ மஸ்ஜித், வாடியத்தன்ன ஜுமுஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாயல்களிலும் ஹெம்மாதகம ஸஹ்ரிய்யா அரபிக் கல்லூரியிலும் குறித்த வழிகாட்டல் செயலமர்வுகள் நடைபெற்றன.
இதில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், இளைஞர் விவகாரக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் ரிபாஹ் ஹஸன், இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத், ஃபத்வாக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான், அஷ்-ஷைக் ஹைதர் அலி, அஷ்-ஷைக் ஸபருல்லாஹ் ஆகியோருடன் இளைஞர் விவகாரக் குழுவின் துணை இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.






–

– ACJU Media –




