கற்பிட்டி, மஸ்ஜிதுல் குபா மஸ்ஜிதில் நடைபெற்ற ‘மஸ்ஜிதுகளூடான சமூக அபிவிருத்தி’ – செயற்றிட்டம் குறித்த அறிமுக நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் ‘மஸ்ஜிதுகளூடான சமூக அபிவிருத்தி’ எனும் செயற்றிட்டம் குறித்த அறிமுக நிகழ்வு 2026 ஜூன் 13 அன்று கற்பிட்டி, மஸ்ஜிதுல் குபா மஸ்ஜிதில் நடைபெற்றது.

ஒரு சமூகத்தில் மஸ்ஜிதின் வகிபாகம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் ஒரு மஸ்ஜித் ஊடாக சமூகத்தை எவ்வாறு அடிப்படையிலிருந்து கட்டியெழுப்பலாம் என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு, மஸ்ஜிதுகளின் நிர்வாகங்கள் இதனை கவனத்தில் எடுத்து துறை சார்ந்தவர்கள் மற்றும் சமூகத்தவர்களின் பங்களிப்புடன் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட மஹல்லாவாசிகள் கலந்து பயன்பெற்றனர்.

இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி கிராத்தி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு இத்திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன